கல்வியில் சமசந்தர்ப்பம் (Equity) R.Sathath,kinniya. “இருக்கும் பலவற்றுள் முக்கியத்துவம் கருதி ஒன்றுக்கோ அல்லது சிலவற்றுக்கோ முதலிடம் வழங்கல் சேவையளிப்பில் அவசியம், அவசரம் முதலிய காரணங்களுக்காக ஒன்றுக்குச் சலுகை காட்டுதல்” தமிழ் விக்சனரி முன்னுரிமை என்கிறது. அரசாங்கம், வணிகம் அல்லது வேறு சில அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் தொடரக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் எளிதாக்குவதற்கான ஏற்பாடுகள் அல்லது தயாரிப்புகளை முதன்மைப் படுத்திச் செய்யும் செயல்முறை முன்னுரிமை எனலாம். அதாவது பண்பு உருவாக்கம், சூழ்நிலையோடு பொருத்தப்பாடு, வாழ்வதற்கான பொருளை ஈட்ட தொழில் செய்தல், அறிவு பெறுதல், நல்ல குடிமகனை உருவாக்குதல் போன்ற பலவகையான நோக்கங்களைஅடைவதற்கான செயல்களைக் கல்வி மேற்கொள்ள வேண்டும். அற்காக கல்வியை அபிவிருத்தி செய்யும் போது கல்வியின் தரம், கல்வியில் சமசந்தர்பம், பொருத்தப்பாடு மற்றும் பாதுகாப்பு என்னும் முன்னுரிமைகள் கவனத்தில் கொள்ளப்படும். எனவே, முன்னுரிமை என்பதை உயர் முக்கியத்துவம் உடைய அல்லது முதன்முதலில் செய்யப்பட வேண்டிய செயல் அதாவது முன்னுரிமை தரப்...
Posts
R.SATHATH'S ARTICLE
- Get link
- X
- Other Apps
கற்றல்-கற்பித்தலுக்கு பாட ஆயத்தம் ஏன் முக்கியத்துவமிக்கது. ஆர்.சதாத், வலயக் கல்வி அலுவலகம், கிண்ணியா. அறிமுகம் திட்டமிடாமல் ஒரு செயற்பாட்டைச் மேற்கொள்ள முனைவோமாயின் அச்செயற்பாட்டைத் தவறாகச் செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்பதே அர்த்தமாகும்.இந்த வகையில் தேசியக் கல்விக் குறிக்கோள்,அடிப்படைத் தேர்ச்சிகள் , கற்றல் பேறுகளை கலைத்திட்டத்தினூடாக மாணவர்களைச் சென்றடையச் செய்ய திட்டமிடாமல் நிச்சயமாக அடையச் செய்ய முயற்சிப்போமாயின் அது நமது மேலோட்டமான விளக்கத்தையே காட்டிநிற்கும். “பிரத்தியேக வகுப்பில் லெஸன் எழுதியா கற்பி;க்கின்றார்கள்?” என்று வினவுவர்கள் சற்று சிந்திக்க வேண்டும். பிரத்தியேக ஆசிரியர்கள் பாட உள்ளடக்கத்தினூடாக பரீட்சைக்கு விடை எழுதுவது எப்படி என்பதை ஒப்புவிப்பவர்களே!. ஆனால், பாடசாலைக் கலைத்திட்டம் அவ்வாறல்ல கலைத்திட்டத்தினூடாகப் பெற்றவைகளை பரீட்சை எழுதி, வாழ்க்கையில் நல்ல மனப்பாங்குடன் திறனையும் பெற்று, சமூகப்பிரஜையை வெளியிடல் என்ற நோக்கோடு திட்டமிடப்பட்ட செயலாகும்.இதற்கு இவற்றை அடையச் செய்ய பாட ஆயத்தம் இன்றியமையாதத...
- Get link
- X
- Other Apps
இன்றைய சிந்தனை கலைத்திட்ட அடைவுக்காக பாடசாலை உள்ளகத் திட்டமிடல்,செயற்திட்டங்கள் மேற்கொள்கிறோம்.அடைவுக்கான புறக்காரணிகள் பாடசாலைக்கு வெளியிலுள்ளன. அடைவுக்கான திட்டமிடலில் இதற்கு முக்கியத்துவமளிப்பது மிகக்குறைவாகவே உள்ளது. விசேட செயற்றிட்டங்கள் மாணவர்களை மட்டும் நோக்கியே அமையபெறுகின்றன.மாறாக அதிபர்,ஆசிரியர்கள்,பெற்றோர்களுக்கான செயற்றிட்டங்கள் மிகக்குறைவாகவே காணப்படுகின்றன.(இல்லை என்று கூறினும் மிகையில்லை.) மாணவர் அடைவில்,பாடசாலைக் கலைத்திட்ட அடைவில் புறக்காரணிகளின் செல்வாக்கை நாம் இன்னும் அறியவில்லையா? அல்லது புறக்காரணிகளை கவனிக்கத் தேவை இல்லையா? "சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்" என்பதெல்லாம் பொய்த்து விடுமோ? சாப்பாட்டுக்கு பிரியாணி முக்கியந்தான் அதைவிட முக்கியம் பானையின் (பாத்திரத்தின்) சுத்தம். ஆர்.சதாத், 2023.05.29